'டிமான்டி காலனி 2': முக்கிய அப்டேட் கொடுத்த அருள்நிதி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ’டிமான்டி காலனி’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்து அருள்நிதி முக்கிய அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
’டிமான்டி காலனி’ முதல் பாகம் தமிழில் மட்டுமே உருவான நிலையில் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் வீடியோ கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.
இந்த நிலையில் ’டிமான்டி காலனி’ இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தையும் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் அருள்நிதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ’டிமான்டி காலனி’ படத்தின் சில புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
அருள்நிதி ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள இந்த படத்தில் ஆன்ட்டி ஜாஸ்கெலனன், டோர்ஜி, அருண் பாண்டியன், ‘குக் வித் கோமாளி’ முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ஆகியோர் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம் சிஎஸ் இசையில், ஹரிஸ் கண்ணன் தீபக் மேனன் ஒளிப்பதிவில், குமரேசன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
DARKNESS HAS BEEN CAPTURED!!
— Arulnithi tamilarasu (@arulnithitamil) June 28, 2023
Happy to have wrapped the shoot of #DemonteColony2 😊
Get ready for lot of updates to follow!!#DarknessWillRule@Ajaygnanamuthu@priya_Bshankar @SamCSmusic @dop_harish @iarunpandianc @ActorMuthukumar @MeenakshiGovin2 @Archana_ravi_ @RaviGkr26… pic.twitter.com/PqqMs21MSa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments