'டிமான்டி காலனி 2' படத்தின் சென்சார் தகவல்.. ஆகஸ்ட் 15 ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அருள்நிதி நடித்த ’டிமான்டி காலனி 2’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ’டிமான்டி காலனி’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்றதை அடுத்து ஒன்பது ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ’யூ/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் உருவான இந்த படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவும் குமரேஷ் படத்தொகுப்பு பணியும் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
It’s U/A for #DemonteColony2.
— Red Giant Movies (@RedGiantMovies_) July 28, 2024
Get ready for a haunting cinematic experience, in theatres near you on August 15th.#DarknessWillRule #DC2FromAug15@BTGUniversal @RedGiantMovies_ @arulnithitamil @bbobby @ManojBeno @AjayGnanamuthu @priya_Bshankar @SamCSmusic @proyuvraaj… pic.twitter.com/L0y0GnZiLd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com