சிலையில் இருந்து வடியும் ரத்தக்கண்ணீர்.. அருள்நிதியின் 'டிமாண்டி காலனி 2' மிரட்டும் மோஷன் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Thursday,August 03 2023]

அருள்நிதி நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’டிமான்டி காலனி’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார் என்பதும், அருள்நிதி இந்த படத்திலும் நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானிசாகர் நடிக்க, அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

சாம் சிஎஸ் இசையில் உருவாகிய இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மிரட்டும் வகையில் உள்ளது. குறிப்பாக சிலையிலிருந்து வடியும் ரத்தக்கண்ணீர், மோஷன் போஸ்டர் வீடியோவின் இறுதியில் வரும் அருள் நிதியின் மிரட்டலான தோற்றம் ஆகியவை இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில், குமரேஷ் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் முதல் பாகம் போலவே வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.