பிசாசு என்று  சித்தரிக்கப்பட்ட அதிபர்… கேலிச் சித்திரத்தால் வெடித்த சர்ச்சை!!!

  • IndiaGlitz, [Thursday,October 29 2020]

 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாமிய மதத்தின் புனிதராகக் கருதப்படும் நபிகள் நாயகத்தை கேலிச் சித்திரமாக வெளியிட்டு இருந்தது சார்லி ஹெக்டே எனும் பத்திரிக்கை. இதனால் கலகக்காரர்கள் அந்த பத்திரிகை அலுவலகம் இருந்த கட்டிடத்தையே வெடித்து சிதறிடித்ததோடு அங்கிருந்த பலரையும் கொன்று குவித்தனர். இதையடுத்து உலகம் முழுவதும் கேலிச் சித்திரத்தை வெளியிடுவது என்றாலே பயந்து நடுங்கும் அளவிற்கு சூழல் மாறிவிட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஒரு வரலாற்று பேராசிரியர் நபிகள் நாயகத்தின் கேலி சித்திரத்தை மாணவர்களுக்கு காண்பித்தார். இதனால் ஆத்திரமடைந்த 18 வயது சிறுவன் அந்த ஆசிரியரை பள்ளி கேட்டிற்கு முன்னாலேயே தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்தான். இதையடுத்து தப்பிச்செல்ல முயன்ற சிறுவனை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சிறுவன் உயிரிழந்தான்.

இந்தச் சம்பவத்தை குறித்து பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மெக்ரான் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் எனக் கருத்துத் தெரிவித்து அதோடு வரலாற்று ஆசிரியரின் இரங்கல் கூட்டத்திலும் அதிபர் கலந்து கொண்டார். இந்த விவகாரம் உலகத்தின் மத்தியில் நேர்மறை, எதிர்மறை என இரண்டு விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தியது. பத்திரிக்கை சுதந்திரத்தைக் குறித்து பலரும் ஆதரவு கருத்து தெரிவித்து வந்தாலும் இன்னொரு பக்கம் இதை மத நிந்தனையாகவும் சிலர் கருதி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள சார்லி ஹெக்டே எனும் அந்த பத்திரிக்கை பத்திரிக்கை சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில் மீண்டும் துருக்கி அதிபரான தாயூப் எர்டோகனை கேலி சித்திரமாக வெளியிட்டது. இந்த விவகாரம் குறித்து துருக்கியில் பலரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்ததோடு அங்கு போராட்டங்களையும் துவங்கி விட்டனர்.

பிரான்ஸ் நாட்டின் பத்திரிக்கை எப்படி துருக்கி பிரதமரை கேலி சித்திரமாக வெளியிட்டதோ அதேபோல தற்போது ஈரான் நாட்டைச் சேர்ந்த வதன் எம்ரூஸ் எனும் பத்திரிக்கை பிரான்ஸ் அதிபரான இம்மானுவேல் மெக்ரானை பிசாசு என சித்தரித்து அதுவும் பத்திரிக்கையின் முதல் பக்கத்திலேயே Le Demon de paris என வெளியிட்டு இருக்கிறது. இதனால் பிரான்ஸ் மக்களிடையே தன்னுடைய நாட்டு அதிபரின் கேலி சித்திரத்தைக் குறித்து மீண்டும் சர்ச்சை எழும்பி இருக்கிறது.