இதுவரை வாரம் ரூ.24,000. இனிமேல் அப்படி இல்லை. ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,November 29 2016]

ரூ.500 ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது. அதாவது ஒருவர் தனது வங்கியில் எத்தனை கோடி இருந்தாலும் வாரத்திற்கு ரூ.24,000 மட்டுமே எடுக்க முடியும் என்பதே அந்த கட்டுப்பாடு
ஆனால் தற்போது 1ஆம் தேதி நெருங்கிவிட்டதால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது உள்பட பல்வேறு செலவுகள் இருப்பதை கருத்தில் கொண்ட ரிசர்வ் வங்கி தற்போது இந்த கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளது. இதன்படி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து எவ்வளவு தொகை வேண்டுமானாலும் ,வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் இருந்து வங்கியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500, மற்றும் ரூ.2000 நோட்டாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பால் பெரிய தொகைகளை வங்கியில் இருந்து எடுக்க முடியாமல் திணறியவர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக வெகுவிரைவில் நாட்டில் இயல்பு நிலை திரும்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.