ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றி கொள்ள மேலும் ஒரு சான்ஸ்?

  • IndiaGlitz, [Friday,January 27 2017]

பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் அசாதாரண நிலை இருந்தது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதியுடன் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை மாற்றிக்கொள்ள காலக்கெடுவும் முடிவடைந்தது. மேலும் மார்ச் 30 வரை இந்த நோட்டுக்களை ரிசர்வ் வங்கியின் கிளைகளில் மட்டும் மாற்றி கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தும், வெகுதூரத்தில் இருந்து சாமானியர்கள் ரிசர்வ் வங்கிக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் பல்வேறு தரப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி செல்லாத நோட்டுக்களை மீண்டும் அனைத்து வங்கிகளிலும் மாற்றிக்கொள்ள அவகாசம் தர இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் ஆலோசித்து வருவதாகவும், வெகுவிரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'துருவங்கள் 16' இயக்குனரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

சமீபத்தில் வெளியாகி எதிர்பாராமல் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'துருவங்கள் 16'. கோலிவுட் திரையுலகில் அறிமுகமான இளைஞர் கார்த்திக் நரேன் இயக்கிய இந்த படத்தை கோலிவுட் பிரபலங்கள் பலர் பாராட்டினர். வித்தியாசமான, விறுவிறுப்பான கார்த்திக் நரேனின் திரைக்கதையை பாராட்டாதவர்களே இல்லை எனலாம்...

மீண்டும் சிம்புவுடன் இணையும் சந்தானம்

தொலைக்காட்சியில் நடித்து கொண்டிருந்த நடிகர் சந்தானம் சிம்புவின் உதவியால் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் கோலிவுட்டின் நம்பர் ஒன் காமெடி நடிகராக உருவானார். தற்போது அவர் மேலும் புரமோஷன் பெற்று நாயகனாக நடித்து வருகிறார். அவர் நாயகனாக நடித்த படங்கள் வசூல் அளவிலும், விமர்சனங்கள் அளவில் பாசிட்டிவ் ஆக உள்ளதால் தொடரந்த&#

இளையதளபதியின் 'விஜய் 61' படத்தின் இசையமைப்பாளர் யார்?

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. 'பைரவா' படத்திற்கு பின்னர் இன்னும் வேறு பெரிய படங்கள் வெளிவராததால் இந்த படத்தின் வசூல் ஓரளவுக்கு திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது...

மாணவர்கள் கோரிக்கையை 3 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றிய முருகதாஸ்

உலகமே வியக்கும் வகையில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது...

இளைஞர்கள் போராட்டத்திற்கு உதவிய மீனவர்களுக்கு லாரன்ஸ் செய்த உதவி

உலகமே வியக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்து, ஜல்லிக்கட்டுக்கான சட்டத்தை இயற்ற வைத்த மாணவர்கள், இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்து வருகிறது. இந்த அறவழி போராட்டம் உலகிற்கே ஒரு வழிகாட்டியாக வருங்காலத்தில் இருக்கும் என்று கருதப்படுகிறது...