ஆணுறுப்பை ரப்பர் பேண்டால் இறுக்கமாகக் கட்டிய நபர்… விபரீத முடிவால் நேர்ந்த துயரம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆணுறுப்பு மட்டுமல்ல, உடலில் உள்ள எந்தவொரு உறுப்பையும் இறுக்கமாக்கும்போது அந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் அந்த இடம் மறுத்துப்போகும். பின்னர் ஆக்சிஜன் கிடைக்காமல் அந்த இடம் செயல் இழந்துபோகும் நிலைக்குக்கூட தள்ளப்படும்.
இப்படியொரு விபரீதச் செயலைத்தான் சிகாகோவில் உள்ள 81 வயது முதியவர் தனது மறதியால் செய்துவிட்டார். இதனால் அவருடைய ஆணுறுப்பு செயலிழக்கும் தன்மைக்கே தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்கள், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து அவருடைய ஆணுறுப்பின் செயல்பாட்டை தற்போது மீண்டும் இயல்பாக்கி உள்ளனர்.
சிகாகோவில் வசித்துவரும் 81 வயது முதியவர் ஒருவருக்கு கடுமையான நீரிழிவு நோய் இருந்துள்ளது. இதனால் அவருடைய இன்சுலின் அளவு அடிக்கடி குறைந்துபோய் இருக்கிறது. கூடவே சற்று மறதி நோயும் அவருக்கு இருக்கிறதாம்.
இந்நிலையில் அந்த முதியவர் ஒருநாள் தனது ஆணுறுப்பில் உள்ள விதைப்பையை ஒரு ரப்பர் பேண்டை வைத்து இறுக்கமாகக் கட்டியுள்ளார். இதைப் பார்த்த அவரது மனைவி அதைக் கழட்டிவிடுமாறு எச்சரித்துள்ளார். ஆனால் மறதிநோய்க் கொண்ட அந்த முதியவர் தொடர்ந்து 3 நாட்கள் வரை கழட்டாமல் அடம்பிடித்துள்ளார்.
இந்த நேரத்தில் அந்த முதியவரின் ஆணுறுப்பு இயல்பைவிட சற்று பெரியதாக மாறி இருக்கிறது. மேலும் அதன் நிறமும் மஞ்சள், பர்ப்பிள் எனத் தொடர்ந்து மாறி இருக்கிறது. இதனால் அதிர்ந்துபோன மனைவி உடனே மருத்துவரை நாடியுள்ளார். இதனால் முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள், இதுபோன்று ரப்பரை வைத்து ஆணுறுப்பை கட்டி வைப்பதெல்லாம் அரிதான செயல். அவருடைய ஆணுறுப்பு இறந்துபோகும் நிலைக்குச் சென்றுவிட்டது எனக்கூறி முதியவருக்கு தீவிரச் சிகிச்சை அளித்துள்ளனர்.
5 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு தற்போது அந்த முதியவரின் ஆணுறுப்பு இயல்புநிலைக்கு திரும்பி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இதுபோன்று ஆணுறுப்பிற்கு எப்போதும் இறுக்கத்தை கொடுக்கக்கூடாது. இதனால் ஆணுறுப்பு இறந்துபோகும் நிலைமைக்குச் சென்றுவிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout