டெல்டா வேரியண்ட் மூளையை கடுமையாகத் தாக்கும்? விஞ்ஞானி கூறும் அதிர்ச்சி தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உருமாறிய வேரியண்ட்களான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகைகள் இரண்டும் மிகவும் தீவிரமான தொற்றுநோயாக இருக்கிறது என்றும் இந்த வைரஸ் மூளைக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்தும்போது நரம்பியல் அறிகுறிகளை பொதுவான வெளிப்பாடுகளாகக் கொண்டு இருக்கும் எனவும் ஐசிஎம்ஆரின் முன்னாள் தலைமை விஞ்ஞானி மருத்துவர் கங்காகேத்கர் தெரிவித்து உள்ளார்.
உருமாறிய டெல்டா வகை வைரஸ்கள் இந்தியாவில் மோசமான அனுபவத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் டெல்டா வகை வைரஸ்களும் உருமாறி தற்போது டெல்டா பிளஸ் வகை வைரஸ்கள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. முன்னதாக டெல்டா வகை வைரஸ்கள் தீவிரமாகப் பரவக் கூடிய தன்மையைக் கொண்டு இருக்கிறது என உலகச் சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்நிலையில் இந்த டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகை வைரஸ்கள் ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு பரவி உடல் உறுப்புகளுக்குச் சேதத்தை ஏற்படுத்துகின்றன. அதேபோல இந்த வைரஸ்கள் மூளைக்குச் செல்லும்போது கடுமையான நரம்பு அறிகுறைகளை பொதுவான வெளிப்பாடாக கொண்டு இருக்கலாம். அதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது என கங்காகேத்கர் தெரிவித்து உள்ளார்.
டெல்டா வைரஸ்களைக் கண்டு தற்போது உலகமே அச்சம் தெரிவித்து வருகிறது. இதுவரை 85 நாடுகளில் டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளதாகக் கூறப்படும் நிலையில் தற்போது இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை வைரஸ்கள் 10 மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதல் உயிரிழப்பு நேற்று மதுரையில் நிகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout