தமிழகத்தில் 70% பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு? அதிர்ச்சி தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் இதுவரை 386 பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இதுவரை 2 உருமாறிய கொரோனா வைரஸ் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் பி.1.617.1 எனும் வைரஸ்க்கு “கப்பா” என்றும் பி.1.617.2 எனும் வைரஸ்க்கு “டெல்டா” என்றும் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா நோய்த்தொற்று ஏற்படுவதற்கு இந்த டெல்டா வகை வைரஸே காரணம் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்து உள்ள நிலையில் தற்போது தமிழகத்திலும் இந்த வைரஸ்க்கான தடயம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இரண்டாம் அலைக்கு காரணமான டெல்டா வகை வைரஸ் தாக்கம் தமிழகத்தில் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டப்பின் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 1,159 நபர்களின் மாதிரிகள் பெங்களூரு மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சோதனையில் 554 மாதிரிகளுக்கான முடிவு தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் 386 பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் 70% பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. வேகமாக பரவும் உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை மிகவும் ஆபத்தானது என உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிச் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் டெல்டாவில் உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பும் இந்தியாவில் கண்டறியப்பட்டு உள்ளது. டெல்டா (பி.1.617.2) வகை வைரஸ்களில் ஸ்பைக் புரதம் K417N பிறழ்வுகள் ஏற்பட்டு இதுவரை 8 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments