தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு…. உறுதிப்படுத்திய சுகாதாரத்துறை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக மருத்துவத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 2 உருமாறிய கொரோனா வைரஸ் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் பி.1.617.1 எனும் வைரஸ்க்கு “கப்பா” என்றும் பி.1.617.2 எனும் வைரஸ்க்கு “டெல்டா” என்றும் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா நோய்த்தொற்று ஏற்படுவதற்கு இந்த டெல்டா வகை வைரஸே காரணம் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்து உள்ள நிலையில் தற்போது டெல்டா வைரஸ்ஸும் உருமாறி இருக்கிறது.
அதாவது டெல்டா (பி.1.617.2) வகை வைரஸ்களில் அதன் ஸ்பைக் புரதம் K417N பிறழ்வுகள் ஏற்பட்டு டெல்டா பிளஸ் வைரஸ் உருவாகி இருக்கிறது. இந்த வைரஸ் இந்தியாவில் 22 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துமாறு மத்திய அரசு, தற்போது மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறது.
டெல்டா பிளஸ் வகை வைரஸ்கள் மகாராஷ்டிராவில் 16 பேருக்கும் மத்தியப்பிரதேசம் மற்றும் கேரளாவைச் சேர்த்து இதுவரை 22 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் முதல் முறையாக தமிழகத்தில் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments