பீட்டா பாதி, டெல்டா பாதி கலந்த கலவை.....! உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ்....!

பீட்டா மற்றும் டெல்டா உள்ளிட்ட வைரஸ்களின் தன்மை, டெல்டா பிளஸ் வைரஸ்-ல் உருமாறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸானது இங்கிலாந்தில் தான் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டு,
இது பற்றிய அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டார்கள். இதையடுத்து நேபாளத்திலிருந்து வந்த 5 நபர்களிடம் உருமாறிய கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனாவின் 2-ஆம் அலை மக்களுக்கு ஏகப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை தந்துள்ளது.

இந்தநிலையில் டெல்டா வைரஸ் தான், தற்போது 'டெல்டா ப்ளஸ்' -ஆக உருமாறியுள்ளது. சென்ற வாரத்தில் மட்டும், சுமார் 11 நாடுகளில், 197 நபர்களுக்கு இந்த வகை தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் 40-க்கும் அதிகமான நபர்களுக்கும், மஹாராஷ்டிராவில் 20-க்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 23-ஆம் தேதி, மத்தியப்பிரதேசத்தில் கொரோனவால் உயிரிழந்த ஒருவருக்கு, டெல்டா பிளஸ் வகை தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட , தடுப்பூசி செலுத்திக்கொண்ட 4 பேர் தொடரிலிருந்து குணமடைந்துள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரஸின், தன்மைகள் பற்றி மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. வேகமாக பரவுவது, நுரையீரலுக்கு சென்று அதன் செல்களோடு ஒட்டிக்கொள்ளுதல், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் குறைக்கும்தன்மை உள்ளிட்டவை இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள டெல்டா வைரஸின், ஸ்பைக் புரோட்டினில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தான், இதை டெல்டா பிளஸ் என கூறுகிறார்கள். இந்த வகையானது, தென் ஆப்பிரிக்காவில் இருந்த 'பீட்டா'-வின் உருமாற்றத்தில் இருந்த ஒன்றாகும். பீட்டா மற்றும் டெல்டா உள்ளிட்ட இரண்டுமே, உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸில் காணப்படுகின்றன. இந்த வகை தொற்றானது விரைவில் பரவி, நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துவதால், தடுப்பூசிகள் எந்த அளவிற்கு பாதுகாப்பை தரும் என்ற அச்சமும் பலர் மத்தியில் எழுந்துள்ளது.

மரபணு ஆய்விற்காக தமிழகத்தில் இருந்து 1159 மாதிரிகள் அனுப்பப்பட்டு, அதில் 772 மாதிரிகளின் முடிவுகள் வந்துள்ளது. அதில் தமிழகத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, உருமாறிய கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தமிழ் நடிகை புகாரளித்தவர் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்!

பிரபல அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

இயக்குனர் ஷங்கர் மகளை திருமணம் செய்யப்போவது கிரிக்கெட் நட்சத்திரமா? வைரல் புகைப்படம்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் ஜூன் 27ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெற இருப்பதாக ஏற்கனவே வெளிவந்த தகவலை பார்த்தோம். ஷங்கர் மகளை திருமணம் செய்யப் போகிறவர்

விஜய்யின் 'பீஸ்ட்' போஸ்டருக்கு ஷாருக்கானின் கூலான பதில்!

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் 'பீஸ்ட்'. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக்

கார்த்தி ஜோடியாக நடிக்கின்றாரா சிம்ரன்?

கார்த்தி நடித்த 'சுல்தான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்

நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்கின்றாரா பிரபல ஹீரோ?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது