கொரோனா வச்சிக்கிட்டு கையைத் தொட்டு டெலிவரி வாங்குறாங்க… நொந்து கொள்ளும் ஊழியர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நேரத்திலும் Swiggy, zomato போன்ற நிறுவனங்கள் மக்களுக்காக சேவை ஆற்றி வருகின்றன. உணவை சப்ளை கொடுக்கும் இந்த நிறுவனங்களைக் காட்டிலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள்தான் பல நேரங்களில் தங்களது உயிரைப் பணயம் வைத்தும் மரியாதையை விட்டுக் கொடுத்தும் பணியாற்ற வேண்டி இருக்கிறது.
இந்நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களில் தற்போது கொரோனா நோய்த்தொற்று தீவிரம் அடைந்து இருக்கிறது. இதனால் உணவை சமைக்க முடியாத பெரும்பாலானோர் உணவுப் பொட்டலங்களை இதுபோன்ற நிறுவனங்களில்தான் ஆர்டர் செய்கின்றனர். அப்படி ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் கொரோனா நேரத்தில் கூட பொறுப்புடன் நடந்து கொள்ளாமல் ஊழியர்களுக்கு தொல்லைக் கொடுப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
மேலும் குறைந்த கூலிக்கு பணியாற்றும் இந்த ஊழியர்கள் கொரோனா நேரத்தில் இ-பாஸ் போன்ற சிக்கலையும் சந்திக்க வேண்டி இருக்கிறது. அதோடு உணவை கொடுக்கச் செல்லும்போது உணவு ஆறிவிட்டது எனக் கூறி வாடிக்கையாளர்கள் பிரச்சனை செய்வதும், கொரோனா இருந்தாலும் அதைக் கூறாமல் ஊழியர்களின் கையைத் தொட்டு உணவு வாங்குவதுமாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக நொந்து கொண்டுள்ளனர்.
இதனால் கொரோனா நேரத்தில் வேலை செய்துதான் தீர வேண்டுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் அந்த ஊழியர்கள், கொரோனா நேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் சமைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சேவை மனப்பான்மை ஒரு பக்கம் இருந்தாலும் எங்களது குடும்ப வறுமைக்காக வேண்டி நாங்கள் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அதுவும் குறைந்த ஊதியதிற்கு பணியாற்றி வருகிறோம். ஆனால் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாமல் ஏளனமாக பார்க்கும் பார்வை இருந்து வருகிறது.
இதனால் கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் கூட இந்த ஏளனமும், அகங்காரமும் தேவைதானா? மனிதாபிமானத்தை கொஞ்சம் காட்டலாமே? என டெலிவரி ஊழியர்கள் நொந்து கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Listen to Swiggy epass eduka konjam help pannuga CM sir on Vaarta
CM க்கு விண்ணப்பம் தெரிவித்த Swiggy ஊழியர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com