கணவனை 22 துண்டுகளாக வெட்டி வீசிய மனைவி… ஏன் இந்தத் தண்டனை தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியில் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய ஷரத்தா வாக்கர் எனும் இளம் பெண்ணை அவரது காதலர் அப்தாப் அமீன் பூனாவலா எனும் இளைஞர் 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் டெல்லியில் இதேபோன்று மீண்டும் ஒரு கொலை சம்பவம் அரங்கேறி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
கிழக்கு டெல்லியிலுள்ள பாண்டவ நகர் பகுதியில் வசித்து வந்தவர் அஞ்சன்தாஸ். இவருடைய மனைவி பூனம். இந்தத் தம்பதிகளுக்கு தீபக் எனும் ஒரு மகன் இருந்த நிலையில் அஞ்சன்தாஸ்க்கு மற்றொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தவிர அஞ்சன்தாஸ்க்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடும் மனவேதனை அடைந்த பூனம், தனது கணவரிடம் பலமுறை சொல்லி வருத்தம் தெரிவித்து இருக்கிறார். ஆனாலும் தனது செயலை மாற்றிக்கொள்ளாத அஞ்சன்தாஸை அவரது மனைவியே தூக்க மாத்திரைக் கொடுத்து கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டியுள்ளார். இதற்கு அவரின் மகன் தீபக்கும் உதவி செய்திருக்கிறார். அதோடு இருவரும் சேர்ந்து வெட்டிய உடல்பாகங்களைத் தங்களது வீட்டு ப்ரிட்ஜுக்குள் வைத்து பாதுகாத்துள்ளனர்.
மேலும் தினம் ஒரு துண்டுகளாக இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் எடுத்துச்சென்று கிழக்கு டெல்லியில் உள்ள சுற்றுப்புறங்களில் வீசியுள்ளனர். அந்த வகையில் அஞ்சன்தாஸின் உடல் பாகம் ஒன்று கடந்த ஜுன் மாதம் பாண்டவ் நகர் காவல் துறையினருக்குக் கிடைத்திருக்கிறது. இதைத்தவிர இரவுநேரத்தில் ஒரு பையை வண்டியில் வைத்து தீபக் எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகளும் பதிவாகியுள்ளன. அந்தக் காட்சியில் இருசக்கர வாகனத்தில் பூனமும் அமர்ந்து சென்றுள்ளார்.
கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக எந்தவொரு தடயமும் கிடைக்காத நிலையில் தற்போது ஷரத்தா வாக்கரின் உடல்பாகங்களை போலீஸார் ஆய்வு செய்தபோது ஒரு உடல்பாகம் அவருடையது அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அஞ்சன்தாஸின் உடல்பாகம்தான் இது என்பதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். இதனால் பூனம் மற்றும் அவருடைய மகன் தீபக் ஆகிய இருவரையும் காவல்துறை அதிகாரிகள் தற்போது கைது செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments