டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்த புதிய முயற்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுவை தடுக்க டெல்லி அரசு பல்வேறு முயற்சிகள் செய்து வரும் நிலையில் தற்போது புதிய முயற்சி ஒன்று சோதனை செய்யப்பட்டுள்ளது
ஒரு இயந்திரம் தண்ணீர் தொட்டியுடன் இணைக்கப்பட்டு, பிளாட்பெட் டிரக் மற்றும் ஸ்ப்ரேஸ் அணுக்கரு நீர் அந்த தொட்டியில் இணைக்கப்படுகிறது. தண்ணீருடன் கலந்த இந்த திரவத்தை மிக வேகமாக மேல்நோக்கி தெளிப்பதன் மூலம் இந்த திரவமானது காற்றில் உள்ள மாசுக்களை சிறிய துளிகளாக உடைத்து தூய்மையாக்குகிறது. சுமார் 230 அடி உயரம் வரை இதனால் காற்று தூய்மைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த புதிய முறை சீனாவில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது டெல்லியில் சோதனை முயற்சியாக ஆனந்த்விஹார் என்ற பகுதியில் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதன முறை வெற்றி பெற்றால் டெல்லி முழுவதும் இந்த முயற்சியால் மாசுவை கட்டுப்படுத்தலாம் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் இம்ரான் ஹுசைன் கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com