கொரோனா இருப்பதாக கூறிய டாக்டரை இரும்புக்கம்பியால் அடித்த நபர்: அதிர்ச்சி தகவல்

தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் கொரோனா இருப்பதாக கூறிய டாக்டர் ஒருவரை இரும்பு கம்பியால் அடித்த நபர் ஒருவரால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டெல்லியை சேர்ந்த டாக்டர் ஒருவர் தனது மருத்துவமனையில் பணி செய்து கொண்டிருந்த போது திடீரென நான்குபேர் அவருடைய மருத்துவமனைக்குள் நுழைந்து இரும்புக்கம்பிகளால் அந்த டாக்டரை கடுமையாக தாக்கினார்கள். இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த டாக்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டரைத் தாக்கிய நால்வரையும் கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது அந்த நால்வரில் ஒருவர் தனது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரவி இருப்பதாக அந்த டாக்டர் அக்கம் பக்கத்தில் உள்ள எல்லோரிடமும் கூறியதாகவும் அதற்கு பழி வாங்கவே டாக்டரை தாக்கியதாகவும் கூறியுள்ளார்

உண்மையில் அந்த நபரின் தந்தையார் சமீபத்தில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்ததாகவும், அதனை அடுத்து அவருடைய குடும்பத்தினர்கள் அனைவரும் கவனமாக இருக்கும்படி கூறியதாகவும் மற்றபடி வேறு யாரிடமும் தான் இதுகுறித்து கூறவில்லை என்றும் டாக்டர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் டாக்டரை கடுமையான தாக்கிய நால்வர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்