தினகரனுக்கு சாதகமாக டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு: ஆதரவாளர்கள் மகிழ்ச்சி
- IndiaGlitz, [Friday,March 09 2018]
சமீபத்தில் நடைபெற்ற ஆர்கே நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தனகரன் அதே குக்கர் சின்னத்தை தனக்கு இனிவரும் தேர்தல்களிலும் பயன்படுத்த அனுமதிக்குமாறு கடந்த சில வாரங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்த சில நாட்களாக விசாரணை நடந்து வந்தது. தேர்தல் கமிஷன் மற்றும் தினகரன் ஆகிய இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை சற்றுமுன் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியது
இந்த தீர்ப்பின்படி டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு தினகரன் அணிக்கு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பும் விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.