'காற்று வெளியிடை'யில் இணைந்த பழம்பெரும் நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,July 12 2016]

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கார்த்திக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி நடிக்கின்றார் என்றும் மேலும் ஒரு முக்கிய வேடத்தில் 'யூடர்ன்' நடிகை ஷராதா ஸ்ரீநாத் இணைந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மற்றொரு இணைப்பாக பிரபல காமெடி மற்றும் குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் இணைந்துள்ளார். தற்போது அவர் ஊட்டியில் நடைபெற்று வரும் 'காற்று வெளியிடை' படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தூள்ளது.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்துவின் வைர வரிகளில் உருவாகி வரும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உலகின் முதல் 'கபாலி' காட்சி எங்கு எத்தனை மணிக்கு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் ரிலீஸ் தேதி ஒருவழியாக ஜூலை 22 என்று கன்பர்ம் ஆகிவிட்ட நிலையில் அனைவரும் அந்த தேதி எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்...

முதல்முறையாக ஜோடி இல்லாமல் நடிக்கும் நயன்தாரா

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இதுவரை 'நீ எங்கே என் அன்பே, 'மாயா' போன்ற பெண் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள ஒருசில படங்களில் நடித்துள்ளார்...

தங்கத்தில் மின்னும் சூப்பர் ஸ்டார். இதோ இன்னொரு 'கபாலி' அதிசயம்

ஹாலிவுட், ஜேம்ஸ்பாண்ட், ஜாக்கிசான் படங்களுக்கு கூட இல்லாத வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 'கபாலி' படத்திற்கு வித்தியாசமான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்...

சுசீந்திரன் - விஷ்ணு படத்தில் மீண்டும் இணையும் பிரபல நடிகை

பிரபல இயக்குனர் சுசீந்திரன் கடந்த ஆண்டு வெளியான விஷாலின் 'பாயும் புலி' படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தை இயக்குவதாக இருந்தார்...

தாய்லாந்தில் 'கபாலி' செய்த பிரமிப்பான சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் நேற்று தணிக்கை செய்யப்பட்டு வரும் 22ஆம் தேதி ரிலீஸ் என்ற அறிவிப்பு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு...