டெல்லி தீவிபத்து: உயிர் போகும் கடைசி நிமிடத்தில் நண்பனுக்கு போன் செய்த நபர்!
- IndiaGlitz, [Monday,December 09 2019]
டெல்லி தீ விபத்தில் சிக்கிய ஒரு நபர் உயிர் போகும் கடைசி நிமிடத்தில் ’என் குடும்பத்தைக் காப்பாற்று என உருக்கமாக போன் செய்து நண்பருக்கு சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.
டெல்லி அனாஜ் மண்டி என்ற பகுதியில் நேற்று நடைபெற்ற தீ விபத்தில் 44 பேர் பரிதாபமாக பலியாகினர் என்பதும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த விபத்தில் சிக்கிய முகமது முஷாரப் என்பவர் கடைசி நேரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் தன்னுடைய நண்பருக்கு போன் செய்து உருக்கமாக பேசிய செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது
முகமது முஷாரப் தங்கியிருந்த கட்டடத்தை சுற்றிலும் தீ பரவியதை அடுத்து இனிமேல் உயிர் தப்பிக்க வழியே இல்லை என்ற நிலையில் உடனடியாக தனது மொபைல் போனை எடுத்து தனது உயிர் நண்பன் சோனு என்பவருக்கு போன் செய்துள்ளார். அதில் அவர் தான் ஒரு பெரிய தீ விபத்தில் சிக்கி உள்ளதாகவும் இனிமேல் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்றும் எனவே தயவு செய்து என் குடும்பத்தினரை நீதான் காப்பாற்ற வேண்டும் என்றும் நீ இருக்கின்றாய் என்ற நம்பிக்கையில் தான் இந்த உலகத்தை விட்டுச் செல்கிறேன் என்றும் உருக்கமாக பேசியுள்ளார் இதனையடுத்து சோனு, ‘உனக்கு ஒன்றும் நேராது பயப்படாமல் இரு என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தபோது திடீரென போன் கட்டாகிவிட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் டெல்லி சென்று புறப்பட்டு போது தனது நண்பன் முகமதுவை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது என்று சோனு கண்ணீர் மல்க கூறியுள்ளார்
உயிர் போகும் கடைசி நிமிடத்திலும் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற நண்பனுக்கு போன் செய்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது