தவறான உறவை தட்டிக்கேட்ட மனைவியை 7 துண்டாக்கிய கொடூர எஞ்சினியர்
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியை சேர்ந்த எஞ்சினியர் ஒருவர் ஒரு பெண்ணுடன் தவறான உறவில் இருந்ததை மனைவி தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்து மனைவியை ஏழு துண்டுகளாக்கி அட்டைப்பெட்டியில் போட்டு குப்பையில் வீசியுள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த எஞ்சினியர் சஜத் அலி அன்சாரி என்பவர் வேலை தேடி டெல்லிக்கு வந்துள்ளார். டெல்லிக்கு வந்தும் அவருடைய திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் மனைவியுடன் அடிக்கடி தகறாறு செய்துள்ளார். இந்த நிலையில் அன்சாரிக்கு மேலும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனை அவரது மனைவி தட்டிக்கேட்டதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அன்சாரி மனைவியை அடித்து கொலை செய்துவிட்டார்.
இதனையடுத்து அன்சாரி தனது உறவினர்கள் உதவியுடன் மனைவியை ஏழு துண்டுகளாக வெட்டி ஒரு அட்டைப்பெட்டியில் போட்டு வெளியே வீசியெறிந்துவிட்டனர். ஒருசில நாட்கள் கழித்து அட்டைப்பெட்டியில் பெண்ணின் பிணம் ஒருசில துண்டுகளாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த அட்டைப்பெட்டி ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து ஒரு பொருள் பார்சல் செய்து கொண்டு வரப்பட்ட அட்டைப்பெட்டி என்பதை கண்டுபிடித்த போலீசார் மிக எளிதில் அன்சாரியை பிடித்துவிட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில் அன்சாரி, தன்னுடைய மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் அன்சாரியையும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர்களையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments