டெல்லி சட்டமன்றத் தேர்தல் மந்தமான வாக்குப் பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப் பட்டது. மாலை 4 மணி வரை 41.5% வாக்குகள் பதிவாகி இருந்தன. காலையில் இருந்து வாக்கு அளிக்கும் எண்ணிக்கை மந்த நிலையிலேயே தொடர்ந்து. முடியும் தருவாயில் 60% சதவீதமாக எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எதிர்ப் பார்க்கப் பட்டது. இந்நிலையில் மாலை 5 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடைந்தது.
தற்போது, டெல்லி சட்ட மன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் அளவு 50% ஆக பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லி கிழக்கு பகுதியில் – 31.31% வாக்குகளும், வடமேற்கு பகுதியில் -28.78% வாக்குகளும், மேற்கு பகுதியில் – 26.77% வாக்குகளும், தென் பகுதியில் -26.71% வாக்குகளும், தென் மேற்கு பகுதியில் – 23.25% வாக்குகளும், டெல்லி மத்திய பகுதிகளில் – 25.36% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை வாக்குச் சேகரிப்பு முடிவடைந்து இன்று 2,700 வாக்கு மையங்களில் வாக்கு பதிவு நடைபெற்றது. டெல்லியில் 70 சட்டமன்ற இடங்களுக்கு 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நகரத்தில் மொத்தமாக ஆண் வாக்காளர்கள் 8.11 மில்லியனும், பெண் வாக்காளர்கள் 6.7 மில்லியனும், மூன்றாம் பாலினத்தவர் 869 வாக்காளர்களும், 11,608 சேவை வாக்காளர்களும், மூத்த குடிமக்கள் 204,830 வாக்காளர்களும் இருப்பதாக டெல்லி தலைமை நிர்வாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டப் பேரவையில் 15 வருடமாக காங்கிரஸ் கட்சி ஆட்சி கட்டிலை பிடித்திருந்த நிலையில் 2015 தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிப் பெற்றார். எனவே இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றோர் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
2015 தேர்தலில் மொத்த முள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் படித்தது குறிப்பிடத் தக்கது. இந்த தேர்தலில் 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் பல முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு இருந்தார். சிஏஏ அறிவிப்பு வெளியிட்ட பின்னர் பா.ஜ.க. சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 11 (செவ்வாய்கிழமை) ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments