டெல்லித் தேர்தல் முடிவு: ட்விட்டரில் அதிர வைத்த குஷ்பு

  • IndiaGlitz, [Tuesday,February 11 2020]

 

டெல்லி சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் படு தோல்வியைத் தழுவியிருக்கிறது. இது கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது குறிப்பிடத் தக்கது. தற்போது ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வில்லை. இரண்டு முறையும் காங்கிரஸின் வேட்பாளர்கள் வெற்றிப் பெறாதது கட்சியின் நிலைப்புத் தன்மையே கேள்வி குறியாக்கி உள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மற்றும் நடிகையான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் “டெல்லியில் காங்கிரஸ் மேஜிக் செய்யும் என்று எதிர்ப் பார்க்கவில்லை. நாம் போதுமான அளவு வேலை செய்கிறோமா? அதைச் சரியாகச் செய்கிறோமா? நாம் சாயான பாதையில் செல்கிறோமா? என்பதற்கு இல்லை என்பதே பதில். நாம் இப்போது உடனடியாக வேலை செய்யத் தொடங்க வேண்டும். இப்போது முயலா விட்டால் எப்போதும் செய்ய முடியாது. அதோடு சமூகத்தில் அடிமட்டம், நடுத்தர மற்றும் உயர் நிலை என எல்லா நிலைகளிலும் சரியான விதத்தில் வேலை பார்க்க வேண்டும்.

அதே நேரத்தில் மோடி மற்றும் குண்டர்களின் கூட்டணியை மக்கள் நிராகரித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.

காங்கிரஸ் இரண்டு தேர்தலிலும் ஒரு இடங்களைக் கூட பிடிக்காதது தற்போது சமூக வலைத் தளங்களில் கடும் கேலிக்கைக்குரிய ஒன்றாக மாறி இருக்கிறது. குஷ்புவின் ட்விட்டர் பதிவிற்கு, “அரசியல் என்பது 24/7 செய்ய வேண்டிய பணி. காங்கிரஸிடம் வீரியமான செயல்பாடு எதுவும் இல்லை. தெளிவான திட்ட மிடலும் இல்லை” என குஷ்புவின் டிவிட்டுக்கு ஒருவர் விமர்சனம் செய்து பதிவிட்டு இருந்தார்.

காங்கிரஸின் செயல்பாட்டினைக் குறித்த இந்த டிவிட்டர் பதிவிற்கு குஷ்பு “ஒப்புக் கொள்கிறேன்” என்ற ஒற்றை பதிலை சொல்லி டிவிட்டர் தளத்தையே அலற விட்டுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.