பெண்ணாக வாழ தகுதியில்லாதவர்: 24 ஆண்டுகள் தண்டனை கொடுத்து அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பணக்காரர்களுக்கு சிறுமிகள் உள்பட இளம் பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்பி வந்த விபச்சார பெண் புரோக்கர் ஒருவருக்கு 24 வருட சிறை தண்டனை விதித்து டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியை சேர்ந்த சோனு பஞ்சாபன் என்ற பெண், டெல்லியை அடிப்படையாகக் கொண்டு விபச்சார தொழிலை செய்து வந்தார். பணம் படைத்த வசதியானவர்களுக்கு சிறுமிகள், மாடல்கள், நடிகைகள் உள்பட பல்வேறு பெண்களை சப்ளை செய்து வந்ததுடன் விபச்சாரத்திற்கு அனுப்பப்படும் பெண்களுக்கு மதுபானம் உள்பட போதை மருந்துகளையும் கொடுத்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் விபச்சாரத்திற்கு செல்லும் பெண்களின் உடல்கள் டைட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஊசிகளை போட்டு கொடுமைப் படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் அவ்வப்போது அவர் ஜாமினில் வெளிவந்தும், வழக்குகளில் இருந்தும் தப்பியும் தொடர்ந்து தனது தொழிலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மீண்டும் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சோனு பஞ்சாபன் கைது செய்யப்பட்டார். அவருடன் அவருடைய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிந்து தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விபச்சார தொழில் செய்த சோனு பஞ்சாபுக்கு 24 வருடங்கள் சிறை தண்டனை விதிப்பதாகவும், 65,000 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய கூட்டாளி ஒருவருக்கு 20 வருட சிறைத்தண்டனையும், 64,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் சோனு பஞ்சாபி ஒரு பெண் என்று அழைக்கப்படுவதற்கான தகுதிகள் அனைத்தையும் இழந்துவிட்டார் என்றும், அவர் இந்த சமூகத்தில் வாழத் தகுதியற்றவர் என்றும் அவர் கடுமையான தண்டனையை அனுபவிக்க தகுதியானவர் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com