Meetoo புகாரில் அவதூறு எதுவும் இல்லை- முன்னாள் பாஜக அமைச்சருக்கு எதிராக அதிரடி தீர்ப்பு!
- IndiaGlitz, [Thursday,February 18 2021]
கடந்த சில வருங்களுக்கு முன்பு பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் இடத்தைப் பிடித்தது Meetoo. இந்த அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாக புகார்களையும் கூறிவந்தனர். இதனால் சினிமா மற்றும் பல அரசியல் தலைவர்கள் மீதான குற்றப் புகார்களும் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த அடிப்படையில் பாலியல் புகாரில் சிக்கியவர்தான் எம்.கே.அக்பர்.
பாஜக சார்பில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.கே.அக்பர். இவர் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில் எம்.கே.அக்பர் பத்திரிக்கையாளராக இருந்தபோது தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என Meetoo ஹேஷ்டேக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு புகார் அளித்து இருந்தார் மூத்தப் பெண் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி. இவரைத் தொடர்ந்து பல பெண் பத்திரிக்கையாளர்களும் அக்பர் மீது தொடர்ந்து பாலியல் புகாரைக் கூறிவந்தனர்.
இந்தக் குற்றச்சாட்டை அடுத்து அக்பரை பதவியில் இருந்து விலக்குமாறு பாஜகவிற்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனால் கடந்த 2018 அக்டோபர் 18 ஆம் தேதி பதவி விலகவும் செய்தார். அதோடு பிரியா ரமணி கூறும் குற்றச்சாட்டில் உள்நோக்கம் இருக்கிறது. அவர் தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைக்கவே இப்படியொரு புகாரைத் தெரிவித்து இருக்கிறார் என டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுத்து இருந்தார் எம்.கே.அக்பர்.
இந்த வழக்கின் விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த வழக்கிற்கான தீர்ப்பினை நீதிபதி ரவிக்குமார் இன்று வெளியிடப்பட்டார். அதில் பிரியா மணி கூறிய பாலியல் குற்றச்சாட்டில் எந்த அவதூறும் இல்லை என்று கூறி வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.