கட்டிப்பிடித்து முத்தமிட்டபடி பைக்கில் செல்லும் இளம்ஜோடி: வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பைக்கில் செல்லும் ஒருசில இளைஞர்கள் படுவேகமாகவும், சாலை விதிகளை மதிக்காமலும் செல்வதால் பலவிபத்துக்களை சந்திக்க நேர்கிறது. அதிலும் குறிப்பாக பின்னால் தங்கள் காதலியோ அல்லது பெண் நண்பரோ இருந்துவிட்டால் பைக், ஜெட் போல பறக்கும் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் டெல்லியில் ஒரு இளம்ஜோடி பைக்கில் சென்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இளைஞர் பைக்கை ஓட்ட, ஒரு இளம்பெண் பெட்ரோல் டேங்கில் அவருடைய பக்கம் திரும்பி உட்கார்ந்து அந்த இளைஞரை கட்டிப்பிடித்து முத்தமிட்டபடியே செல்கின்றனர். அந்த இளைஞரோ சாலை விதிகளை மதிக்காமல் சென்றதும், குறைந்தபட்சம் இருவரும் ஹெல்மெட் கூட போடாமல் சென்றதும் பார்ப்போரை பதபதக்க வைத்தது
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர், 'இதுபோன்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு என சட்டங்களில் தனிப்பிரிவுகள் கொண்டு வரவேண்டும் என்று தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.
Need for new sections for #MV Act violations!! #Rajouri garden crossing. pic.twitter.com/0gn7LsIIYM
— HGS Dhaliwal IPS (@hgsdhaliwalips) May 2, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com