இந்தியாவில் கடும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் டெல்லி மாநாடு??? நடந்தது என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியில் நிஜாமுதின் பகுதியில் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த மாநாட்டில் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற பல வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 2000 பேரும் கலந்து கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்தவகள் மட்டும் 1500 பேர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், டெல்லி சென்று திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த 16 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது.
மார்ச் 11 ஆம் தேதி தாய்லாந்தில் புகேட் நகரில் இருந்து டெல்லி வழியாக தமிழகம் வந்த 2 பேருக்கு மார்ச் 25 ஆம் தேதி கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிச்செய்யப்பட்டது. அவர்கள் ஈரோடு ஐ.ஆர்.டி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் 65 வயது ஆண் மற்றும் 75 வயது ஆண் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகத்தில் அவர்களுடன் பயணித்த 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது.
தாய்லாந்து நபர்களுடன் ரயில் பயணம், உணவு என அனைத்து இடங்களுக்கும் தமிழகத்தைச்சேர்ந்த 33 பேர் ஒன்றாக பயணம் செய்து இருக்கின்றனர். தற்போது இவர்களில் பலருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டு அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். திருவாரூரில் 13 பேர் தற்போது அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டு இருக்கின்றனர்.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1500 பேர். இவர்களைப் பற்றிய விவரத்தை தமிழக சுகாதாரத்துறை பணியாளர்கள் தற்போது சேகரித்து வருகின்றனர். 981 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்ட நிலையில் தற்போது மற்றவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக, டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் ஈரோடு பெருந்துறை பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மாநாட்டில் கலந்துகொண்டு கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களில் ஒரு மருத்துவர் மற்றும் 10 மாதக்குழந்தையும் அடக்கம். முன்னதாக மதுரையில் கொரோனா நோயினால் இறந்தவரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போது மதுரையில் இறந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. தாய்லாந்து நாட்டினருடன் பயணித்து கொரோனா நோய்த்தொற்று ஆளான பெண் மருத்துவரின் குடும்பத்தில் 3 பேருக்கு நோய் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே இந்த மாநாடு நடைபெற்றது என்றும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பிப்ரவரியில் தொடங்கியது என்றும் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்த விசாரணையை டெல்லி அரசு முடுக்கிவிட்டு இருக்கிறது. தமிழத்தில் மட்டும் 16 பேருக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments