கமல்ஹாசன் சந்திக்கும் இரண்டாவது முதல்வர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக அரசியல் கருத்துக்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் கூறி வரும் கமல்ஹாசனை கவனித்து வருபவர்கள் அவர் அரசியலில் மிக விரைவில் குதிப்பார் என்றே கணித்துள்ளனர். அதற்கேற்றவாறு பிக்பாஸ் உள்பட அவர் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அரசியல் வெளிப்படுகிறது
இந்த நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுப்பிரமணியன் சுவாமி உள்பட ஒருசில அரசியல்வாதிகள் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவுள்ளதாக ஆரூடம் கூறினர்
இந்த நிலையில் இன்று சென்னை வரும் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கமல்ஹாசனை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியில் கமல்ஹாசன் சேருவாரா? அக்கட்சியின் தமிழக தலைவராக கமல்ஹாசன் நியமனம் செய்யப்படுவாரா? அல்லது இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பா? என்பது உள்பட பல கேள்விகளுக்கு இன்றைய சந்திப்பில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout