மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசம்: முதல்வர் அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்து பேருந்து ஆகியவற்றில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜகவே வென்றது. இந்த நிலையில் டெல்லியில் இன்னும் ஆறு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் வாக்காளர்களை கவர டெல்லி முதல்வர் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அந்த வகையில் முதல்கட்டமாக டெல்லி மெட்ரோ ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு டெல்லியை சேர்ந்த பெண்கள் வரவேற்றுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments