க்ளீன் போல்டான SRH சன்ரைசர்ஸ் அணி… ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறுமா?
- IndiaGlitz, [Thursday,September 23 2021] Sports News
ஐபிஎல் 14 ஆவது சீசன் தொடரின் 33 ஆவது லீக் ஆட்டம் நேற்று டெல்லி கேபிடள்ஸ் அணிக்கும் சன் ரைடர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி டெல்லி கேபிடள்ஸ் வெற்றிப்பெற்றுள்ளனர். இன்னொரு பக்கம் SRH அணியிடம் ஆக்ரோஷமோ அல்லது வெறித்தனமான பேட்டிங்கையோ பார்க்க முடியாதது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற SRH அணியின் டாப் ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 3 பந்துகளைச் சந்தித்து எந்தவித ரன்னும் எடுக்காமல் கேட்ச் கொடுத்து முதல் ஓவரிலேயே அவுட்டானார். அதையடுத்து ரிதிமான் 18 ரன்கள், கேப்டன் கேன் வில்லியம்சன் 18 ரன்கள், மனீஷ் பாண்டே 17 ரன்கள், கேதர் ஜாதவ் 3 ரன்கள், அப்துல் சமத் 28 ரன்கள், ரஷீத்கான் 22 ரன்கள் என்று ஒட்டுமொத்தமாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு SRH 134 ரன்களை குவித்து இருந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் ப்ரிதிவிஷா 11 ரன்களை எடுத்த நிலையில் அவுட்டானார். ஆனால் ஷிகர்தவான் 37 பந்துகளை சந்தித்து 42 ரன்களைக் குவித்து அணியின் ஸ்கோரை நிலை நிறுத்தினார். பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 47 ரன்களையும் ரிஷப் பண்ட் 21 பந்துகளில் 35 ரன்களையும் எடுத்து அணியின் வெற்றியை உறுதிச் செய்தனர். இதனால் டெல்லி கேபிடள்ஸ் வெறும் 17.5 ஆவர் முடிவில் அசலாட்டாக வெற்றிப்பெற்றது.
ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிடள்ஸ் இதுவரை 9 போட்டிகளைச் சந்தித்து 7 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. இதனால் 14 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. ஆனால் சன் ரைடர் ஹைத்ராபாத் அணி இதுவரை 8 போட்டிகளைச் சந்தித்து 7 தோல்விகளை பெற்று வெறும் 2 புள்ளிகளை மட்டுமே வைத்துள்ளது. அடுத்து இந்த அணிக்கு 6 போட்டிகள் உள்ள நிலையில் அனைத்திலும் வெற்றிப்பெற்றால்கூட ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற முடியாது என்று மூத்த வீரர்கள் கருத்துக் கூறிவருகின்றனர்.
அதுவும் நேற்றைய போட்டியில் சன் ரைடர்ஸ் அணியின் ஆட்டத்தைப் பார்த்த மூத்த வீரர்கள் சிலர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோதே அணியின் சரிவு உறுதியானது. இதைத்தவிர அணியில் யாரிடமும் ஆக்ரோஷமான ஆட்டத்தையோ, அல்லது உற்சாகத்தையோ பார்க்க முடியவில்லை என்றும் மோசமான விமர்சனத்தை வைத்து இருக்கின்றனர். இந்த மனநிலையால்தான் நேற்று டெல்லி கேபிடள்ஸ் மிக எளிதாக வெற்றிப்பெற்றுள்ளது என்றும் கூறிவருகின்றனர்.