வீடியோகேமுக்கு அடிமையாகி பெற்றோரை கொலை செய்த 19 வயது வாலிபர்
- IndiaGlitz, [Saturday,October 13 2018]
டெல்லியில் வீடியோ கேம் விளையாட்டிற்கு அடிமையாகி தாய், தந்தை மற்றும் சகோதரியை கொலை செய்த 19 வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த சுராஜ் என்ற வாலிபர், பள்ளிக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனியாக அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து வீடியோ கேம் விளையாடியுள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடியோகேம் விளையாடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த சுராஜின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுராஜ், தாய், தந்தை, சகோதரி மூவரையும் கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மாலையே சுராஜை கைது செய்தனர். பெற்றோர்களின் இறுதிச்சடங்கிற்கு கூட சுராஜ் அனுமதிக்கப்பட்டவில்லை.
இதுகுறித்து சுராஜூடன் அறையில் வீடியோ கேம் விளையாட மற்ற மாணவ, மாணவியர்களிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.