தலைநகர் டில்லியில் திடீர் குண்டுவெடிப்பு… இஸ்ரேல் தூதரம் அருகே நிகழ்ந்ததால் பதற்றம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று (29.01.2021) மாலை தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே திடீர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து தலைநகர் டெல்லியில் கடும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே விவசாயப் போராட்டங்களினால் நெருக்கடியில் சிக்கியிருக்கும் டெல்லி தற்போது குண்டு வெடிப்பை சந்தித்து இருக்கிறது.
இச்சம்பவத்தில் 4 கார்கள் சேதம் அடைந்து உள்ளதாக டெல்லி போலீசார் தகவல் வெளியிட்டு உள்ளனர். மேலும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதையும் டெல்லி போலீஸ் உறுதிப்படுத்தி இருக்கின்றது. இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே அப்துல்கலாம் சாலையில் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது. மேலும் இந்த விபத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு குறித்த விசாரணையைத் தற்போது நிபுணர்கள் தொடங்கி உள்ளனர்.
விவசாயிகள் கடந்த 26 ஆம் தேதி டெல்லியில் பெரிய டிராக்டர் பேரணியை தொடங்கினர். இந்த பேரணியில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து ஒட்டு மொத்த டெல்லியிலும் 144 தடை சட்டம் கொண்டு வரப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகைய பரபரப்புக்கு இடையே இன்று மாலை வெடிகுண்டு விபத்து நடைபெற்று இருக்கிறது. இதனால் விவசாயப் போராட்டம் கேள்விக்குறியாகி விடுமோ? என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்ற வெடிகுண்டு விபத்து எதனால் நடைபெற்றது? இதற்கு காரணம் யார்? என்பது குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாக வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இச்சம்பவம் டெல்லி மக்கள் மத்தியில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout