ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை நீக்குங்கள்: மத்திய அரசு அறிவுறுத்தல்
- IndiaGlitz, [Thursday,July 09 2020]
இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பதும், அதில் தமிழக வீரர் பழனி என்பவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த மோதலைத் தொடர்ந்து சீனாவின் 89 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதில் கோடிக்கணக்கான பயனர்களை பெற்றுள்ள டிக்டாக் மற்றும் ஹலோ ஆப் ஆகியவையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அடுத்ததாக அதிரடி அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சீனாவின் செயலிகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ் பெற்ற பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் தற்போது இந்த செயலிகளை செல்போனில் வைத்து இருந்தால் உடனடியாக நீக்கி விடுமாறும் இந்திய ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்திய ராணுவத்தினர் இவ்வகை செயலிகளை பயன்படுத்துவதால் அதன் மூலம் தகவல்கள் கசியும் என்பதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் வாட்ஸப், டுவிட்டர், டெலிகிராம் ஆகியவற்றை ராணுவ வீரர்கள் என்ற அடையாளத்தைத் தவிர்த்து பயன்படுத்தலாம் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது