தரமான வார்த்தைகள்: தோனி குறித்து பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Sunday,November 01 2020]

இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியின் 53வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தல தோனி பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தார். அப்போது வர்ணனையாளர் ‘மஞ்சல் உடையில் விளையாடுவது இந்த போட்டி தான் உங்களுக்கு கடைசி போட்டியா? என்று கேட்க அதற்கு தோனி, ‘இல்லவே இல்லை’ என்று உறுதியுடன் கூறினார்.

இன்றைய போட்டி இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் கடைசி போட்டி என்ற நிலையில், இந்த போட்டி தனது கடைசிப் போட்டி இல்லை என்று தோனி கூறியிருப்பதில் இருந்து அடுத்த வருடமும் தோனி சிஎஸ்கே அணிக்காக தலைமை தாங்கி விளையாடுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தோனியின் 'Definitely Not' என்ற இந்த இரண்டு வார்த்தைகள் தற்போது டுவிட்டரில் ட்ரெண்டாகி இருக்கும் நிலையில் பிரபல தமிழ் காமெடி நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் 'Definitely Not' என்பது தரமான வார்த்தைகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.