நடிகை தீபிகா படுகோன் வீட்டிற்கு வந்த தேவதை.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Sunday,September 08 2024]

நடிகை தீபிகா படுகோன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன் வீட்டிற்கு வந்த தேவதைக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் திருமணம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தீபிகா கர்ப்பமானதாக தெரிவித்தார். அவ்வப்போது தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பிணியான புகைப்படங்களை பதிவு செய்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணி போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று தீபிகா படுகோனுக்கு பிரசவ வலி வந்ததை அடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதை அடுத்து சற்றுமுன் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தீபிகா படுகோனின் இந்த பதிவிற்கு பூஜா ஹெக்டே, சமந்தா, அபிராமி வெங்கடாசலம், பிந்து மாதவி, ரித்திகா, ராதிகா சரத்குமார், அஞ்சலி, மஞ்சு வாரியர், மஞ்சிமா மோகன், பாடகி ஜொனிதா, கீர்த்தி சுரேஷ், தமன்னா உள்ளிட்ட பல நடிகைகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

More News

'வேட்டையன்' படத்தில் மறைந்த பிரபல பாடகரின் பாடல்? ஏஐ டெக்னாலஜி பாடலா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் மறைந்த பழம்பெரும் பாடகர் குரல் ஏஐ

அனுமதி கிடைத்துவிட்டது.. தடைகளை தகர்ப்போம்.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

விஜyயின் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதை அடுத்து விஜய் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஹீரோவாகும் பாலகிருஷ்ணா மகன்.. முதல் படமே சினிமாட்டிக் யுனிவர்ஸ்.. இயக்குனர் யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்ஷக்னா ஹீரோவாக அறிமுகம் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இனி கமல் படங்களில் ஏஐ டெக்னாலஜியை பார்க்கலாம்... அமெரிக்கா சென்று படிக்கும் உலக நாயகன்..!

உலகநாயகன் கமல்ஹாசன் ஏஐ டெக்னாலஜி குறித்து படிப்பதற்காக அமெரிக்கா சென்று உள்ளதாகவும் அவர் 90 நாட்கள் அங்கு தங்கியிருந்து படிப்பார் என்றும் கூறப்படுகிறது.

'ஜெயிலர்' படத்தில் நடித்த முக்கிய நடிகர் கைது.. விமான நிலையத்தில் போதையில் தகராறு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்த முக்கிய நடிகர் விமான நிலையத்தில் போதையில் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.