இதுதான் நீங்க டிக்கெட்டை கேன்சல் செய்த லட்சணமா? பிரபல நடிகை கிண்டல்!

  • IndiaGlitz, [Thursday,January 09 2020]

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜே.என்யூ மாணவர்கள் போராடி வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று, மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியது. இந்த தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு நடிகை தீபிகா படுகோனே நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அவரது இந்த தைரியத்தை நெட்டிசன்கள் பலர் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இன்று தீபிகா படுகோனே நடித்த ’சப்பக்’ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் தீபிகாவின் ’சப்பக்’ படத்தை பார்க்கப் போவதில்லை என ஒரு சிலர் முன்பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்ததாக புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் செய்தனர்.

ஆனால் ஒரே டிக்கெட்டை பலரும் கேன்சல் செய்ததாக புகைப்படத்தை வெளியிட்டிருந்ததால் ஒரு டிக்கெட்டை எத்தனை பேர்கள் தான் கேன்சல் செய்வீர்கள் என நடிகை தீபிகா படுகோனே கிண்டலுடன் கேள்வியெழுப்பியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது