முத்தக்காட்சிக்கு கணவர் ஓகே சொன்னாரா? பதிலடி கொடுத்த தீபிகா படுகோன்!

  • IndiaGlitz, [Thursday,February 10 2022]

பாலிவுட் குயின் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் “கெஹ்ரயான்“ எனும் திரைப்படத்தில் முன்னணி நடிகர் சித்தார்த் சதுர்வேதியுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இயக்குநர் ஷகுன் பத்ரா இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் சித்தார் சதுர்வேதி, நடிகை அனனன்யா பாண்டே, தைரிய கர்வா போன்றோர் நடித்துள்ள திரைப்படம் “கெஹ்ரயான்“. இந்தத் திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. முன்னதாக இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் நடிகர் சித்தார்த் சதுர்வேதியும் நடிகை தீபிகாவும் நெருக்கமாக இருக்கும் பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதனால் நடிகை தீபிகா படுகோனை சிலர் இணையத்தில் விமர்சித்து ட்ரோல் செய்துவந்தனர். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் கலந்துகெர்ணட நடிகை தீபிகாவிடம் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதற்கு உங்கள் கணவரிடம் அனுமதி பெற்றீர்களா? எனக் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. இதற்குப் பதிலளித்த நடிகை தீபிகா இதுபோன்ற முட்டாள்தனமான ட்ரோல்களை நான் கண்டுகொள்ளவில்லை. ரன்வீரும் படிக்க மாட்டார் என்று தெரியும்.

அவர் எனது நடிப்பை விரும்புவார் என்று நான் நினைக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்து அவர் பெருமைப்படுவார். என்னுடைய நடிப்பும் சிறப்பாக இருக்கும். மேலும் ஷுட்டிங்கில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர் ஷகுன் பத்ராவிற்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நட்சத்திரத் தம்பதிகளாக வலம்வரும் நடிகை தீபிகாவும் நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். தற்போது 4 ஆண்டுகளைக் கடந்து மகிழ்ச்சியான உறவுநிலையில் இருந்துவரும் இருவரும் தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தீபிகா தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் இணைந்து பான் இந்தியா திரைப்படம் ஒன்றில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.