அம்மாவுக்கு கொரோனா: பிரதமர், முதல்வரிடம் உதவி கேட்ட பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை ஒருவர் தனது தாயாருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு முதல்வர் மற்றும் பிரதமர் உதவி செய்ய வேண்டும் என்றும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல ஹிந்தி சீரியல் நடிகை தீபிகாசிங். இவர் 45 பேர் கொண்ட கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தீபிகாசிங் தாயாருக்கு திடீரென கொரோனா தொற்று பரவியதை அடுத்து டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தனது தாயாரின் மருத்துவ அறிக்கையை தருமாறும் அதன் பின்னர் தான் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற முடியும் என்றும் தீபிகா சிங் தரப்பிலிருந்து கேட்டதற்கு மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து சரியான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து இதுகுறித்து தீபிகா சிங் தனது டுவிட்டரில், ‘தனது தாயார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்டவர்கள் உதவி செய்யும்படியும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டில் அவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவருக்கும் டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல்லியின் டெபுடி கமிஷனர் இந்த டிவிட்டுக்கு பதிலளித்துள்ளார். தீபிகாவின் தாயார் தற்போது கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்தே தீபிகாவும் அவரது குடும்பத்தினரும் தற்போது நிம்மதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
My mom & dad are in Delhi. Mom has been diagnosed with Covid positive & Lady Hardinge hospital didn’t give reports only allowed my father to click its picture. I really hope the concerned personell are reading this and my mom there receives some relief. @ArvindKejriwal @PMOIndia pic.twitter.com/kXzjhZZ73x
— Deepika Singh Goyal (@deepikasingh150) June 12, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments