இந்தியாவை நினைத்தால் எனக்கு பயமாக இருக்கின்றது: பிரபல நடிகை

  • IndiaGlitz, [Wednesday,January 08 2020]

இந்தியாவை நினைத்தால் தனக்கு பயமாக இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டெல்லியில் ஜே.என்.யூ மாணவர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார் தீபிகா படுகோனே. முன்னணி நடிகர்களே இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கும் நிலையில் தீபிகா படுகோன் தைரியமாக தனது ஆதரவை தெரிவித்ததற்கு இணையத்தில் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

அதே நேரத்தில் தீபிகாவுக்கு எதிராகவும் சில குரல்கள் எழுந்து வருகின்றனர் அவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ’சப்பக்’ என்ற படத்தின் விளம்பரத்துக்காக அவர் இவ்வாறு செய்வதாக ஒரு சிலர் கருத்து தெரிவித்து, அந்த படத்தை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்

இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய தீபிகா படுகோனே ’எனக்கு எதிராக இப்படி போராட்டம் செய்வார்கள் என்று எனக்கு தெரியும் என்றும், பத்மாவத் படம் வந்தபோதும் இதுதான் நடந்தது என்றும் கூறினார். அதற்காக நான் என்னுடைய நிலைப்பாட்டை மாற்ற முடியாது என்றும் என் மனதில் தோன்றியதை அதிகமாக சொல்லித்தான் விடுவேன் என்றும் கூறினார்

மேலும் இந்தியாவில் நினைத்தால் பயமாக இருக்கிறது என்றும் இந்தியா எங்கே செல்கிறது என்று எனக்கு தெரியவில்லை என்றும் அடுத்து இந்தியாவில் என்ன நடக்கும் என்பதை நினைத்தால் கவலையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்