தீபிகா படுகோனே திருமண தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,October 22 2018]

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர்சிங்கை காதலித்து வந்ததாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் இந்த தகவல் தற்போது உறுதியாகியது மட்டுமின்றி திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரன்வீர்சிங்-தீபிகா திருமணம் வரும் நவம்பர் மாதம் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை தீபிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

திருமணம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. தீபிகா படுகோனே தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.