அடுத்த ஒன்பதாவது மாதத்தில் குழந்தை? தீபிகா படுகோனே

  • IndiaGlitz, [Thursday,January 09 2020]

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தற்போது ‘சப்பக்’ படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்ததால் கடந்த இரண்டு நாட்களாக அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறார்

இந்த நிலையில் அவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவரது கர்ப்பம் குறித்த கேள்வி ஒன்றுக்கு சிறிது கோபத்துடன் பதிலளித்தார். நான் தற்போது கர்ப்பம் தரிக்கும் நிலையில் இல்லை என்றும் நான் சினிமாவில் பிசியாக இருக்கிறேன் என்றும் தற்போதைக்கு என்னுடைய கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது என்றும் கூறினார்

மேலும் நானும் எனது கணவரும் சினிமாவில் நடிப்பதை முழுநேர தொழிலாக கொண்டிருப்பதால் இப்போதைக்கு குழந்தைகள் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் எங்களுக்கு குழந்தைகள் மீது ஆர்வமும் பாசமும் உண்டும் என்றும் தெரிவித்தார்

எங்களுக்கு குழந்தைகள் எப்போதும் வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த நேரத்தில் பெற்றுக் கொள்வோம் என்றும் நான் கர்ப்பம் ஆனால் அதை என்னால் மறக்க முடியாது என்றும் என் உடலும் வயிறும் காட்டிக் கொடுத்துவிடும் என்று கூறிய தீபிகா, அடுத்த ஒன்பதாவது மாதத்தில் நான் எதுவும் சொல்லவில்லை என்றால் நான் கர்ப்பம் என்று நீங்களே அறிந்து கொள்ளலாம் என்றும் கோபத்துடன் கூறியதால் அந்த பேட்டி பரபரப்புடன் முடிவடைந்தது