கர்ப்பமாக இருக்கும் போது இப்படியா ஒர்க்அவுட் செய்வது? நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்..!

  • IndiaGlitz, [Thursday,July 04 2024]

பிரபல நடிகை தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கர்ப்பமாக இருக்கும் பெண் இப்படியா ஒர்க் அவுட் செய்வது என அட்வைஸ் கூறி வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில் அவர் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவரது கால் சுவரில் வைத்திருப்பதையும் அவர் தரையில் படுத்து இருப்பதையும் பார்க்க முடிகிறது.

இந்த யோகா பெண்களுக்கு ஏற்படும் தசைகள், மூட்டுகள், கணுக்கால் மற்றும் பாதங்களில் உள்ள வலியை போக்க உதவும் என்றும் கீழ் முதுகில் அழுத்தத்தை குறைக்கவும் சோர்வு உணர்வுகளை போக்க உதவும் என்றும் தீபிகா இந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

நான் ஒரு நல்ல உடற்பயிற்சியை விரும்புகிறேன், அழகாக இருப்பதற்காக மட்டும் அல்ல, ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் என்று கூறிய தீபிகா, உடற்பயிற்சியில் ஈடுபட முடியாத போது இந்த எளிய ஐந்து நிமிட யோகாவை செய்கிறேன், உடற்பயிற்சி செய்தாலும் சரி, யோகா செய்தாலும் சரி, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு பல ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தாலும் சில ரசிகர்கள் கர்ப்பமான நேரத்தில் இப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர். தீபிகா படுகோன் இந்த புகைப்படத்தை பதிவு செய்து சில மணி நேரங்களே ஆகி உள்ள நிலையில் 8 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஒரு ஜான் வயித்துக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு.. ரம்யா பாண்டியன் வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை ரம்யா பாண்டியன் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஒரு ஜான் வயித்துக்கு எவ்வளவு கஷ்டப்பட

சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் டைட்டில் இதுவா? மீண்டும் ரஜினி ரெஃப்ரன்ஸ்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் கசிந்துள்ளது.

🙏சீரடி சாய் பாபாவின் பெருமைகள் மற்றும் அற்புத அனுபவங்கள் | ஆன்மீககிளிட்ஸ்

பிரபல ஆன்மீக யூடியூப் சேனலான ஆன்மீககிளிட்ஸில் ஆன்மீக அன்பர் சாய் S. பிரதீப் அவர்கள், சீரடி சாய் பாபா பற்றியும்,

'பாரதி கண்ணம்மா' நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை சன் டிவி பிரபலமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்த நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும் அவரை திருமணம் செய்ய போவார் விஜய் சன் டிவி பிரபலம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

சுசித்ரா சர்ச்சை கருத்துக்கு பதிலடி கொடுத்தாரா த்ரிஷா.. வைரல் பதிவு..!

பாடகி சுசித்ரா சமீபத்தில் விஜய் மற்றும்  த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்த நிலையில் அந்த கருத்துக்கு  மறைமுகமாக பதிலடி கொடுக்கும் வகையில் த்ரிஷா தனது