சர்வதேச திரைப்பட விழா- குழுவிற்கு நடுவராகியிருக்கும் பிரபல நடிகை… ரசிகர்கள் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
சர்வதேச அளவில் முக்கிய திரைப்பட விழாவாகக் கருதப்படும் கேன்ஸ் திரைப்பட விழா குழுவிற்கு பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோன் நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்துவரும் தீபிகா படுகோன் ஹாலிவுட் சினிமாவிலும் கால்தடம் பதித்து ரசிகர்களிடையே பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “கெகாரியான்“ திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தனது கணவர் ரன்வீர் சிங் நடிக்கும் “சர்க்கஸ்“ திரைப்படத்திலும் ஷாருக் நடிக்கும் “பதான்“ திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். இதைத்தவிர தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் இணைந்து “புரொஜெக்ட் கே“ எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படி இந்திய மொழி சினிமாக்களில் கொடிக்கட்டிப் பறந்துவரும் நடிகை தீபிகா தற்போது சர்வதேசத் திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவின் சிறப்பு நடுவர் குழுவில் ஒருவராகத் தேர்வாகியுள்ளார். வரும் மே 17-21 ஆம் தேதி வரை 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் உலகம் முழுக்கவுள்ள 22 சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து திரையிடப்படும். கூடவே சிறந்த படங்களுக்கான palme d Or விருதும் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதைத் தேர்வு செய்வதற்காக 8 பிரபலங்கள் அடங்கிய குழு ஒன்று செயல்பட இருக்கிறது.
இந்தக் குழுவில் பிரெஞ்ச் நடிகர் வின்சென்ட் லிண்டன் தலைவராகவும் Iron man 3 படத்தின் நாயகி ரெபேக்கா ஹால் மற்றும் இயக்குநர் ஜேப் நிக்கோலஸ் ஆகியோர் முக்கிய நபர்களாகச் செயல்பட உள்ளனர். இந்நிலையில் இந்தியத் திரைப்பட நட்சத்திரம் தீபிகா படுகோனும் இந்தக் குழுவின் நடுவர்களுள் ஒருவராகத் தேர்வாகி இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
C’est l'acteur français Vincent Lindon qui présidera le Jury du 75e Festival de Cannes ! Entouré de ses huit jurés, il remettra la Palme d’or à l’un des 21 films de la Compétition le samedi 28 mai, lors de la Cérémonie de clôture. #Cannes2022
— Festival de Cannes (@Festival_Cannes) April 26, 2022
► https://t.co/f1KHJGhheX pic.twitter.com/gsG9WjGA0O
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments