'வாத்தி கம்மிங்' பாடலுடன் தீபிகா படுகோன் வெளியிட்ட வேற லெவல் வீடியோ!

  • IndiaGlitz, [Monday,April 19 2021]

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’வாத்தி கம்மிங்’ பாடல் பின்னணியில் பதிவு செய்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்' என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் பாடல் வரிகள் புரியாதவர்கள் கூட இந்த பாடலுக்கு நடனமாடி ரசிக்கும் வீடியோக்கள் உலகம் முழுதும் வைரலாகி வருகின்றன என்பது தெரிந்ததே.

அந்த வகையில் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’வாத்தி கம்மிங்’ பாடல் பின்னணியுடன் அவர் பல்வேறு போஸ்களில் நடந்துவரும் வீடியோ காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவுக்கு அவர் என்றும் கேப்ஷனாக BTS of BTS என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவுக்கு கமெண்ட் அடித்த ரசிகர் ஒருவர் ’விரைவில் தளபதி விஜய் உடன் இணைந்து ஒரு படத்தில் நடியுங்கள்’ என்று கோரிக்கை வைத்துள்ளார். தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகை தீபிகா படுகோன் ரசிகை என்பது இந்த வீடியோ மூலம் தெரியவந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.