மும்பை கடற்கரையில் வீடு வாங்கிய பாலிவுட் நட்சத்திர தம்பதிகள்… விலை தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்துவரும் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் தம்பதிகள் மும்பை கடற்கரையை ஒட்டி புதிதாக உருவாகிவரும் அடுக்குமாடி குடியிருப்பில் விலையுயர்ந்த வீட்டை வாங்கியுள்ளதாகத் தகவல் வளியாகி இருக்கிறது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்துவரும் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் இருவரும் 6 வருடங்களாகத் காதலித்து பின்னர் 2018 இல் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் இருவருமே சினிமாவில் படு பிசியாக நடித்துவரும் நிலையில் சமீபகாலகமாக இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வருவதாகவும் இதனால் விவாகரத்திற்கு முயற்சித்து வருவதாகவும் சில போலி தகவல்கள் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது நடிகை தீபிகா மற்றும் ரன்வீங் சிங் இருவரும் இணைந்து மும்பையின் பாந்த்ரா கடற்கரையை ஒட்டி உருவாக்கப்பட்டு வரும் புதிய அடுக்குமாடி குடியிருப்பில் 16-19 தளம் வரையிலும் 4 தளங்களை விலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபிகா மற்றும் ரன்வீர் வாங்கியுள்ள தளங்கள் நான்கும் ஒன்றுக்கொன்று இணைக்கும் விதமாக உருவாக்கப்பட உள்ளதாகவும் இந்தப் பணிகளை கவனிப்பதற்காகவே நட்சத்திரத் தம்பதிகள் தங்களது பெற்றோருடன் நேரடியாக வந்து கட்டுமான பணிகளை பார்வையிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நடிகை தீபிகா மற்றும் ரன்வீர் வாங்கியுள்ள 4 தளங்களுக்கான வீட்டின் மொத்த விலை ரூ.119 கோடி எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே மும்பையின் ஜுகு மற்றும் பாந்த்ரா பகுதியில் புதிய வீட்டை தேடிவந்த தம்பதிகள் தற்போது நடிகர் ஷாருக்கானின் வீட்டிற்கு அருகே உருவாகிவரும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்களது வீட்டை தேர்வு செய்துள்ளனர்.
இந்தத் தம்பதிகளுக்கு ஏற்கனவே மகாராஷ்டிராவின் அலிபாக் பகுதியில் விலையுயர்ந்த மற்றொரு வீடு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை தீபிகா படுகோன் பாலிவுட்டில் வெளியாகி ஹிட் அடித்த ‘பதான்’ திரைப்படத்தில் நடிகர் ஷாருக்குடன் இணைந்து நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸுடன் இணைந்து ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்திலும் ஹித்திருக்குடன் இணைந்து ‘ஃபைட்டர்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com