பிரபல நடிகையின் நிறைமாத கர்ப்பிணி போட்டோஷூட்.. ஒரு சில மணி நேரங்களில் 50 லட்சம் லைக்ஸ்..!

  • IndiaGlitz, [Tuesday,September 03 2024]

பிரபல நடிகை நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அது குறித்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் ஒரு சில மணி நேரத்திற்குள் 50 லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் சமீபத்தில் கர்ப்பமானார் என்பதும் அவர் அவ்வப்போது கர்ப்பமான புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணி குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

பத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருக்கும் இந்த போட்டோஷூட்டில் இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஒரு சில மணி நேரங்களில் இந்த புகைப்படங்களுக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

தமிழ் திரை உலகை சேர்ந்த இந்துஜா ராமச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம், சாந்தினி, பிரியா அட்லி, ஆத்மிகா, அனிதா சம்பத், காயத்ரி சங்கர், கீர்த்தி பாண்டியன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குறித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.