இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகை யார் தெரியுமா? நம்பவே முடியாத தகவல்…!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஒருவர் ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கும் மேல் வருமான வரி செலுத்துவதாகத் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் அவர்தான் சினிமா துறையில் அதிகம் வரிச் செலுத்தும் முதல் நடிகை என்று கூறப்படுகிறது.
பாலிவுட் சினிமாவில் ‘பத்மாவத்‘, ‘பாஜீராவ் மஸ்தானி‘, ‘ராம் லீலா’ சமீபத்தில் ‘பதான்’ என்று பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை நடிகை தீபிகா படுகோன். இவர் கடந்த 2018 இல் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பல முக்கிய திரைப்படங்களில் நடித்துவரும் இவர் சமீபத்தில் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்தியாவில் அதிகம் வரி செலுத்திய நடிகை யார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஃபோர்ப்ஸ் இந்தியா மற்றும் Stockgro போன்ற இணையதளங்கள் வெளியிட்ட இந்த அறிக்கையில் நடிகை தீபிகா படுகோன் கடந்த 2016-2017 நிதியாண்டில் இருந்து ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கும்மேல் வருமான வரி செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்துவரும் இவர் ஒரு திரைப்படததிற்கு குறைந்தது 10-15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இதைத் தவிர பல பிராண்ட் நிறுவனங்களுக்காக விளம்பரங்களில் நடித்து வருகிறார். மேலும் சில தொழில் முதலீடுகளையும் வைத்திருக்கிறார். அந்த வகையில் ஆண்டுக்கு இவருடைய வருமானம் 40 கோடி எனக் கூறப்படுகிறது. கடந்த 2019 இல் மட்டும் ரூ. 48 கோடியாக இருந்தது எனவும் தகவல் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2018 இல் இருந்து ஒரு திரைப்படத்திற்கு 15-20 கோடியாக ஆக அவர் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டதாகவும் மேலும் பிராண்ட் நிறுவன பொருட்களின் விளம்பரங்களுக்கு ரூ.8 கோடியாக நிர்ணயித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் நடிகை தீபிகா படுகோனின் சொத்து மதிப்பு தற்போது ரூ.500 கோடி எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அவர் நடித்துவரும் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்திற்காக ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ‘பத்மாவத்’ திரைப்படத்திற்கு ரூ.12 கோடியும் ‘பாஜிராஜ் மஸ்தானி ’ திரைப்படத்திற்கு ரூ.20 கோடியும் அவர் வாங்கியுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் கூறப்படுகின்றன.
இதனால் நடிகை தீபிகா தற்போது ஆண்டுக்கு வருமான வரியாக ரூ.10 கோடிக்கு மேல் வருமான வரி செலுத்தி அதிகம் வரி செலுத்தும் முதல் நடிகையாக இருக்கிறார். அடுத்ததாக ஆலியா பட் ரூ.5-6 கோடி வருமான வரி செலுத்தி இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர்களைப் பொறுத்தவரை நடிகர் அக்ஷய் குமார் ரூ.25 கோடிக்கு மேல் வருமான வரி செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு நடிகை கத்ரினா கைஃப் கடந்த 2013 – 14 வாக்கில் 5 கோடி வருமான வரி செலுத்தி அதிகம் வருமான வரி செலுத்திய நடிகை என்று பெயர் பெற்றிருந்தார். அதேபோல நடிகை தீபிகா படுகோன் சொத்து மதிப்பில் ரூ.500 கோடியுடன் இந்தியாவில் இரண்டாவது பணக்கார நடிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். முதலாவதாக நடிகை பிரியங்கா சோப்ரா ரூ.620 கோடி சொத்து மதிப்பை கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout