விசாரணையின்போது கதறியழுதாரா தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Sunday,September 27 2020]

போதைப்பொருள் விவகாரம் இந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே. பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி, கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, ஆகியோர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பிரபல பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், சாரா அலிகான், சாரதா கபூர், மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளனர்

இதில் விசாரணையின்போது தீபிகா படுகோன் மூன்று முறை அழுததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் குறித்த வாட்ஸ் அப் குழு ஒன்றுக்கு தீபிகா படுகோன் அட்மினாக இருந்ததாக வெளியான தகவலை அடுத்தே அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும் அவரிடம் 6 மணி நேரம் நடந்த விசாரணையின்போது மூன்று முறை அவர் இடையிடையே அழுததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இதனை அடுத்து தீபிகாவிடம் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று அனுப்பி வைத்துள்ளனர் மேலும் தீபிகா படுகொன் உள்பட நான்கு நடிகைகளின் செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து தடயவியல் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது