close
Choose your channels

நயன்தாரா படத்தில் தீபிகா படுகோனேவுக்கு என்ன கேரக்டர்?

Wednesday, June 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படத்தில் தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அவருக்கு என்ன கேரக்டர்? என்ற தகவலும் கசிந்துள்ளது.

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. கணவர் விக்னேஷ் சிவனுடன் தேனிலவை முடித்து விட்டு வந்த மறுநாளே ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டிருக்கிறார் என்றும் இன்னும் இருபது நாட்கள் அவர் ‘ஜவான்’ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஷாருக்கான் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் அதாவது தந்தை மகன் கேரக்டரில் நடித்து வருவதாகவும், மகன் கேரக்டருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருவதாகவும் தெரிகிறது.

இந்த் நிலையில் ஷாருக்கானின் தந்தை கேரக்டருக்கு மனைவியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் வில்லனாக ’பாகுபலி’ படத்தில் தனது நடிப்பால் மிரட்டிய ராணா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

இந்த படம் அடுத்தாண்டு ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment