close
Choose your channels

தீபிகா படுகோன் பேபி பம்ப் போட்டோஷூட்.. குவியும் திரையுலக பிரபலங்களின் ரியாக்சன்..!

Thursday, June 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவர் முதல்முறையாக பேபி பம்ப் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கடந்த 2018 ஆம் ஆண்டு தான் காதலித்த நடிகர் ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் 6 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் அவர் கர்ப்பமான நிலையில் தேர்தலுக்கு வாக்களிக்க வரும் போது கர்ப்பமான வயிற்றுடன் வெளியே வந்தார்.

இதனையடுத்து நேற்று நடந்த ’கல்கி 2898 ஏடி’ பட நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்ட நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டான கருப்பு உடையில் பேபி பம்ப் தெரியும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு நடிகைகள் அக்ஷரா ஹாசன், ஹன்சிகா, ரகுல் ப்ரீத் சிங் , ப்ரணிதா, நடிகர் மகத் உட்பட பல திரை உலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் பதிவு செய்து சில மணி நேரங்களெ ஆகியுள்ள நிலையில் 32 லட்சத்திற்கும் அதிகமாக லைக்ஸ் குவிந்துள்ளது என்பதும் ஆயிரக்கணக்கான கமெண்ட்கள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment