ஆசிய அளவில் 2வது, 3வது இடங்களை பிடித்த ரஜினி, விஜய் நாயகிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரில் கிட்டதட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் தற்போது இருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. தாங்கள் நடிக்கும் படங்களின் செய்திகளையும், தங்களுடைய தனிப்பட்ட நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது டுவிட்டரில் நடிகர், நடிகைகளே நேரடியாக தெரிவிப்பதால், அவர்களை ஃபாலோ செய்யும் நபர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆசிய அளவில் டுவிட்டரில் அதிகப்படியான நபர்களால் பின்தொடரப்படும் பெண்களின் பட்டியல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த நடிகை ஆன்கன்ஸ் மோ என்பவர் டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரை 1 கோடியே 45 லட்சம் பேர் அவரை பின்தொடர்கின்றனர்.
இரண்டாவது இடத்தில் ரஜினியின் கோச்சடையான்' நாயகியும் பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான நடிகை தீபிகா படுகோனே உள்ளார். இவரை 1 கோடியே 25 லட்சம் நபர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
விஜய்யுடன் 'தமிழன்' படத்தில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டின் மற்றொரு முன்னணி நடிகையாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா 3வது இடத்தில் உள்ளார். இவரை 1 கோடியே 20 லட்சம் நபர்கள் பின்தொடர்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com