ஆசிய அளவில் 2வது, 3வது இடங்களை பிடித்த ரஜினி, விஜய் நாயகிகள்

  • IndiaGlitz, [Saturday,December 19 2015]

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரில் கிட்டதட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் தற்போது இருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. தாங்கள் நடிக்கும் படங்களின் செய்திகளையும், தங்களுடைய தனிப்பட்ட நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது டுவிட்டரில் நடிகர், நடிகைகளே நேரடியாக தெரிவிப்பதால், அவர்களை ஃபாலோ செய்யும் நபர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் ஆசிய அளவில் டுவிட்டரில் அதிகப்படியான நபர்களால் பின்தொடரப்படும் பெண்களின் பட்டியல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த நடிகை ஆன்கன்ஸ் மோ என்பவர் டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரை 1 கோடியே 45 லட்சம் பேர் அவரை பின்தொடர்கின்றனர்.

இரண்டாவது இடத்தில் ரஜினியின் கோச்சடையான்' நாயகியும் பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான நடிகை தீபிகா படுகோனே உள்ளார். இவரை 1 கோடியே 25 லட்சம் நபர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

விஜய்யுடன் 'தமிழன்' படத்தில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டின் மற்றொரு முன்னணி நடிகையாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா 3வது இடத்தில் உள்ளார். இவரை 1 கோடியே 20 லட்சம் நபர்கள் பின்தொடர்கின்றனர்.

More News

சலங்கை ஒலி-சங்கராபரணம் போன்ற படங்களை இயக்க ஆசை. பிரபுதேவா

ஒவ்வொரு வருடமும் சென்னை நகரில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சி 'சென்னையில் திருவையாறு' என்பது அனைவரும் அறிந்ததே...

குழந்தைகளுக்கு ஓவிய போட்டி வைத்த பசங்க 2' படக்குழு

சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கிய 'பசங்க 2' படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது...

தனுஷ், விக்ரம்குமாருடன் 3வது முறையாக இணையும் சமந்தா

கோலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவரான சமந்தா, தனுஷுடன் நடித்த 'தங்கமகன்' நேற்று வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

ஹீரோ அந்தஸ்து பெறும் மற்றொரு காமெடி நடிகர்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக வலம் வந்த கவுண்டமணி, வடிவேல், விவேக், சந்தானம் ஆகியோர்...

சந்தானம் படத்தை இயக்கும் மணிரத்னம் உதவியாளர்

சந்தானம் ஹீரோவாக நடித்த 'இனிமே இப்படித்தான்' படத்தின் வெற்றிக்கு பின்னர் தொடர்ந்து ஹீரோ சப்ஜெக்ட் படங்களாக நடித்து வரும் நிலையில் தற்போது ...